"டான்சி" வக்கீல், தங்க தமிழ்செல்வனுக்கு அதிமுக எம்.பி. பதவி
சென்னை:
டான்சி வழக்கில் வாதாடி ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்த வழக்கறிஞர் என். ஜோதி, ஆண்டிப்பட்டிமுன்னாள் எம்.எல்.ஏவான தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அதிமுக எம்.பிக்களாக ராஜ்ய சபா செல்லவுள்ளனர்.
ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடவுள்ள 4 அதிமுக வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் அறிவித்தார்.
தனக்காக ஆண்டிப்பட்டி தொகுதியையே விட்டுக் கொடுத்து, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த தங்கதமிழ்செல்வனுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியை அளித்துள்ளார் ஜெயலலிதா.
மேலும் டான்சி மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளில் தனக்காக வாதாடி வெற்றி பெற்று, தான் மீண்டும்முதல்வராகக் காரணமான வழக்கறிஞர் ஜோதிக்கும் ராஜ்ய சபா சீட்டை நன்றிக் கடனாக ஜெயலலிதாஅளித்துள்ளார்.
இவர்கள் 2 பேர் தவிர வடக்கு தர்மபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரான சீ. பெருமாள் மற்றும் தேனிமாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் எஸ்.பி.எம். சையது கான் ஆகியோரையும் எம்.பிக்களாக ராஜ்ய சபாவுக்குஜெயலலிதா அனுப்பி வைக்கிறார்.
தமிழக சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக உருவெடுத்திருப்பதால் இந்த 4 பேரின் வெற்றியும் உறுதிஎன்பது தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications