தமிழக-புதுவை மீனவர்கள் திடீர் மோதல்: போலீஸ் துப்பாக்கி சூடு
காலாப்பட்டு:
தமிழக, பாண்டிச்சேரி மீனவர்கள் கூனிமேடு கடற்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதால்,கலவரத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
பாண்டிச்சேரி மாநிலம் காலாப்பட்டு அருகே உள்ள கூனிமேடு மீனவர் கிராமம் தமிழக பகுதியை சேர்ந்தது. இந்தகிராமத்தினருக்கும், காலாப்பட்டு மீனவ கிராமத்தினருக்கும் இடையே மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்கனவேமுன்விரோதம் இருந்து வந்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலாப்பட்டு மீனவர்களில் சிலர் வழக்கம் போல் கூனிமேடு கடற்கரையில் மீன்பிடிக்க சென்றனர். எப்படி எங்கள் எல்லையில் நீங்கள் மீன் பிடிக்கலாம் என்று கூனிமேடு மீனவர்கள் கேட்டதாககூறப்படுகிறது.
இந்த செய்தியை கேட்ட காலாப்பட்டு மீனவர்கள் 63 படகுகளில் சென்று தகராறு செய்தனர். இதைத் தொடர்ந்துஇரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இவர்கள் துடுப்பு, சுளுக்கி, அரிவாள் ஆகியவற்றால் தாக்கிகொண்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கும்பலை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி 11முறை சுட்டனர். உடனே மீனவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த மோதலில் கூனிமேடு குப்பத்தை சேர்ந்த 12 பேரும், காலாப்பட்டு மீனவப் பகுதியை சேர்ந்த 14 பேரும்படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழக போலீசாரும், பாண்டிச்சேரி போலீசாரும் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவத்தால் இரு எல்லைப் பகுதிகளில் உள்ள மீனவ குப்பங்களில் பதட்டம் நிலவி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications