பெட்டியில் வாலிபர் பிணம்: சென்னையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ரயில்வே பிளாட்பாரத்தில் பிணம் அடங்கிய பெட்டியை போலீஸார் மீட்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் ஒரு பெட்டி நீண்ட நேரம் கிடந்தது. அந்தப்பெட்டியைப் பார்த்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சந்தேகமடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

ரயில்வே போலீஸார் விரைந்து வந்து பெட்டியை மீட்டு சோதனை போட்டனர். பெட்டியைத் திறந்து பார்த்தபோதுஅருகம்புல் பரப்பப்பட்டு அதில் ஒரு ஆணின் பிணம் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. ஜட்டி மட்டுமே அந்த நபர் அணிந்திருந்தார். மிகவும்அழுகியநிலையில் உடல் இருந்தது.

அந்த நபர் யார், அவரைக் கொன்றது யார் என்ற விவரம் தெரியவில்லை. எங்கோ கொன்று விட்டு பெட்டிக்குள்அடைத்து விட்டு ரயில் நிலையத்தில் கொண்டு வந்து போட்டுள்ளனர்.

சமீபத்தில்தான் அண்டாவில் ஒரு பிணம் கிடந்தது. அது யார் என்று இன்னும் கூட துப்பு துலங்கவில்லை.இந்நிலையில் பெட்டிக்குள் ஒரு பிணம் கிடைத்துள்ளது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை மேட்டில் எரிந்த வாலிபர்:

இந்நிலையில் சென்னை அருகே எண்ணூ

திருவொற்றியூர் அருகே எண்ணூ

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தக் குப்பை மேடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ எரிய எரிய பிண வாடைஅடிப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கும், நகராட்சி நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மறுநாள் காலை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் மவுரியா தலைமையிலான போலீஸார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்தக் குப்பை மேட்டில் பாதி எரிந்த நிலையில் ஒருவாலிபரின் பிணம் கிடந்தது தெரிய வந்தது.

இரவில்தான் அந்த நபர் எரிக்கப்பட்டிக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்த நபர் பக்கத்துமீனவக் குப்பங்களில் ஏதாவது ஒன்றைச் சார்ந்தவராக இருக்கக் கூடும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+