அயோத்தி: தீர்ப்பை மேலும் கடுமையாக்கிய உச்ச நீதிமன்றம்
டெல்லி:
அரசு கையகப்படுத்தியுள்ள நிலம் முழுவதிலுமே பூமி பூஜை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பைத்திருத்தி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டது.
உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்ட தீர்ப்பில், அயோத்தியில் உள்ள கோட் ராமச்சந்திரபுரத்தில் 67.73 ஏக்கர்நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பிளாட் எண் 159 மற்றும் 160ல் எந்தவிதமான பூஜையும் சிலை தான பூஜையும்நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
அப்படியென்றால் அரசு கையகப்படுத்தியுள்ள நிலத்தின் மற்ற பிளாட்களில் பூஜை நடத்தலாமா என்பது போன்றகேள்வியை ஒரு பத்திரிக்கை கேள்வி எழுப்பி இருந்தது.
இதைக் கண்டு இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் தீர்ப்பில் சில திருத்தங்களைச் செய்ய முடிவு செய்தார்கள்.அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜியையும் இன்று காலை அழைத்து தீர்ப்பில் திருத்தம் செய்யப் போவதாகக்கூறினர். இதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் படியும் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடந்து, உடனடியாகதீர்ப்பும் திருத்தி எழுதப்பட்டது.
அயோத்தியில் அரசு கையகப்படுத்தியுள்ள நிலம் முழுவதிலுமே எந்தவிதமான பூஜையும் நடத்தப்படக் கூடாதுஎன்று தங்களது தீர்ப்பை நீதிபதிகள் திருத்தினர்.
அதன்படி 159 மற்றும் 160ம் எண் கொண்ட பிளாட்டுகளில் மட்டுமல்லாமல் அரசின் கைவசமுள்ள 67.73 ஏக்கர்பரப்பில் உள்ள அனைத்து (சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட) பிளாட்டுகளிலுமே பூஜையும் சிலைதான பூஜையும்நடத்தப்படக் கூடாது என்று புதிய தீர்ப்பின்படி தெரிய வருகிறது.
அயோத்தி சட்டம், 1993 (பிரிவு 33) என்ற சட்டப்பிரிவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதன் அடிப்படையில்அரசின் கைவசம் உள்ள நிலம் முழுவதிலும் பூஜையும் சிலை தான பூஜையும் செய்யத் தடை விதிக்கப்படுவதாகக்கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications