நாளை என்ன நடக்கும்? - இன்று மாலை வி.எச்.பி. முக்கியக் கூட்டம்
அயோத்தி:
பூமி பூஜை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இன்று (வியாழக்கிழமை) மாலைவிஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பின் முக்கியக் கூட்டம் அயோத்தியில் நடைபெற உள்ளது.
ராமர் கோவில் கட்டுமானப் பணிகளைத் துவக்கும் முயற்சியாக வரும் 15ம் தேதி (நாளை) பூமி பூஜை நடைபெறும்என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளையும், வி.எச்.பியும் அறிவித்திருந்தன.
ஆனால் நேற்று இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில், அயோத்தில் தற்போதையநிலையே நீடிக்க வேண்டும் என்றும் பூமி பூஜை நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
ஆனால் பூஜைதானே கூடாது, நாங்கள் தூண் தானம் செய்யும் நிகழ்ச்சியை நடத்துவோம். இதற்காக நாங்கள்தூண்களைச் சுமந்து கொண்டு செல்வோம். அதை யாராலும் தடுக்க முடியாது. முடிந்தால் தடுத்து நிறுத்தட்டம்பார்க்கலாம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர பரமஹம்ஸ் சவால் விட்டுள்ளார்.
இதே நிலையைத் தெரிவித்துள்ள வி.எச்.பி. இன்று மாலை முக்கியக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது. இந்து மதத்தலைவர்களும் சாமியார்களும் சாதுக்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் பல முக்கியத் தலைவர்கள் பல்வேறு இடங்களில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர் என்று பரமஹம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பூமி பூஜையை எதிர்காலத்தில் எப்படி நடத்துவது என்பது குறித்தும் நாளை நடைபெறவுள்ள தூண் தானம்வழங்கும் நிகழ்ச்சி குறித்தும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்:
இதற்கிடையே அயோத்தியில் பதற்ற நிலை உச்ச கட்டத்தை எட்டியுள்ளதால், அங்கு பாரா மிலிட்டரி படைகளும்போலீசாரும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள 85 கம்பெனி பாரா மிலிட்டரி வீரர்கள் தவிர, கூடுதலாக 10 கம்பெனி வீரர்களும்அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஏறக்குறைய 10,000 வீரர்கள் அயோத்தி முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் அனைத்தும் அயோத்திக்கு வெளியே 95 கி.மீ. தூரத்தில் உள்ள பாராபங்கிஎன்ற இடத்திலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications