2 பா.ஜ.க. எம்.பிக்கள் கைது: வி.எச்.பி. துணைத் தலைவரும் கைது
லக்னெள:
கரசேவகர்களுடன் அயோத்தி செல்ல முயன்ற விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் ஆச்சாரிய கிரிராஜ்கிஷோர் கைது செய்யப்பட்டார்.
அதே போல அயோத்தியில் பூஜை நடத்தச் சென்ற 2 பா.ஜ.க. எம்.பிக்களும் கைது செய்யப்பட்டனர்.
பிரச்சனைக்குரிய இடத்தில் எந்தவிதமான பூஜையும் செய்யவோ, எந்தவிதமான மதரீதியிலான செயல்களையும்செய்யவோ உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதையடுத்து இப்போது பிரச்சனைக்குள்ளாகாத இடத்தில் கோவில் கட்ட ஒரே ஒரு தூணை மட்டும் தானம் செய்யப்போவதாக ராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர தாஸ் அறிவித்துள்ளார்.
ஆனால், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அங்கு தடையைத் தாண்டி கோவில் கட்டுவோம் எனவும்எப்படியாவது பிரச்சனைக்குரிய இடத்துக்குள் நுழைவோம் எனவும் அறிவித்துள்ளனர்.
இதனால், அயோத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. உத்தரப் பிரதேம் உள்பட நாடு முழுவதும் ஒருவித பயம்கலந்த சூழ்நிலை காணப்படுகிறது. பிரச்சனைக்குரிய இடத்தில் ஏதாவது நடந்தால் அதன் காரணமாக நாடுமுழுவதும் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சம் பரவியுள்ளது.
இதனால் அயோத்திக்குள்ளேயே வி.எச்.பியினரும் கரசேவகர்களும் நுழைந்துவிடாமல் தடுக்க மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. மாநில போலீசாரை நம்பிப் பயனில்லை என்பதால் மத்திய ரிசர்வ் போலீஸ், மத்திய அதிரடிப்படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை ஆகியவற்றை அயோத்தியில் இறக்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராணுவத்தினரையும் தயார் நிலையில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் கிரிராஜ் கிஷோர் மாலை மரியாதைகளுடன் தனது வி.எச்.பி. தொண்டர்களுடன் லக்னொவில்இருந்து கிளம்பினார். சூலாயுதங்களுடன் அவரது ஆதரவாளர்கள் புடைசூழ அவர் பல கார்களில் அயோத்திக்குப்புறப்பட்டார். அவரை அங்கேயே தடுத்து நிறுத்த முடியவில்லை.
அவர் புறப்பட்டுவிட்ட தகவல் பிரதமர் வாஜ்பாய்க்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை வழியிலேயேகைது செய்ய உத்தரவு பறந்தது.
இதையடுத்து லக்னொவில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அவரது கார் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. அவரும்அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தி புறப்படும் முன் நிருபர்களிடம் பேசிய அவர், நான் கோவில் கட்டுவதற்காக அயோத்தி செல்கிறேன்.அங்கு நிச்சயம் பூஜை நடத்துவேன் என்றார். இதையடுத்து அவர் கைதாகியுள்ளார்.
பா.ஜ.க. எம்.பிக்கள்:
பூஜை விவகாரம் முழுக்க முழுக்க வி.எச்.பி., ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் செயல் என்பது போல பா.ஜ.க.காட்டிக் கொண்டாலும் உண்மையில் அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களும் இந்தப் பூஜை நடத்துவதில்தீவிரமாக உள்ளனர்.
இன்று அயோத்திக்குள் நுழைய முயன்ற பிரிஜ் பூஷன், சின்மயானந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க. எம்.பிக்களில் பெரும்பான்மையானவர்கள் ஆட்சியில் இருப்பதைவிட கோவில் விவகாரத்தில்வி.எச்.பியை ஆதரித்து ஆட்சியை விட்டு விலகுவது தான் சரி என பிரதமரிடம் கூறி வருகின்றனர். இதையடுத்துத்தான் உச்ச நீதிமன்றத்தில் பூஜைக்கு ஆதரவாக மத்திய அரசு பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.
250 பேர் கைது:
அதே போல அயோத்தி அருகே அந்த நகருக்குள் நுழைய முயன்ற 250 கர சேவகர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
அயோத்திக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஊரடங்கு நிலை தான் நிலவுகிறது.இந்த சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று காலை அயோத்திக்குள் நுழைய முயன்ற 250 கர சேவகர்களை போலீசார் சாலையிலேயேதடுத்து நிறுத்தி திரும்பப் போகுமாறு கூறினர். ஆனால், அவர்கள் அதையும் மீறிப் புறப்பட்டபோது அவர்கள்அனைவரும் கைது செய்யப்பட்டு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று தெரிகிறது.
போலீசாருக்குத் தெரியாமல் சிறு சிறு குழுக்களாக காவியுடைகள் அணியாமல் வேறு உடைகளில் கர சேவகர்கள்அயோத்திக்குள் நுழைந்து வருகின்றனர். இதையடுத்து அந்த நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும்சோதனையிடப்படுகின்றன.
சைக்கிளில் செல்பவர்கள் கூட சோதனையிடப்படுகின்றனர். நடந்து செல்பவர்களின் பைகளில் பூஜைப் பொருள்கள்,செங்கல், சூலாயுதம் போன்றவை உள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அப்படியே அவர்கள் மீறி நுழைந்தாலும் கூட பிரச்சனைக்குரிய இடத்திலும் அதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர்நிலத்துக்குள்ளும் நுழைந்துவிடாமல் தடுக்க மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் மட்டும் 3,000 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த இடத்தின் ஒவ்வொரு அடியிலும்பாதுகாப்புப் பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications