துப்பாக்கியுடன் திரிந்த சிறுவனால் சென்னையில் பரபரப்பு
சென்னை:
சென்னை தியாகராய நகர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் அலைந்த சிறுவன் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தினான். அவனை போலீஸார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
தி.நகர் பர்கிட் சாலையில் வியாழக்கிழமை இரவு ஒரு சிறுவன் கைத் துப்பாக்கியுடன் சென்று கொண்டிருந்தான். இதைப் பார்த்த பொதுமக்கள்பீதியடைந்தனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அந்த சிறுவனைப் பிடித்துவிசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிறுவனின் பெயர் மோகன் என்றும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைக்குப்பத்தை சேர்ந்தவன்என்றும் தெரிய வந்தது. மோகனின் தாயார் இந்திரா சென்னையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.
மோகனை, திருவாரூரில் ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்த்துள்ளார் இந்திரா. அந்த வீட்டில் இருக்க மோகனுக்குப் பிடிக்கவில்லை. இந்தநிலையில், மோகனை, சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பியுள்ளார் திருவாரூர் வீட்டுக்காரர்.
சேலத்தில் காளியப்பன் என்பவரது வீட்டில் இருந்த மோகனுக்கு தனது தாயைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியுள்ளது. இதையடுத்துகாளியப்பன் வீட்டில் இருந்த ஒரு பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். அந்தப் பையில் கொஞ்சம் பணமும்,கைத்துப்பாக்கியும்,தோட்டாக்களும் இருந்தன.
துப்பாக்கியைப் பார்த்தும் அவனுக்கு அதை கீழே போட மனம் வரவில்லை. எனவே கையில் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
மோகனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி முறையான உரிமம் பெறப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும்துப்பாக்கியுடன் நடமாடியதால் மோகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அவன் அனுப்பப்பட்டான்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications