பாண்டிச்சேரியில் மசூதிக்கு தீ வைப்பு: பெரும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

புதுவை:

பாண்டிச்சேரியில் ஒரு மசூதிக்கு இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

பாண்டிச்சேரி சுல்தான்பேட்டையில் ஒரு மசூதி உள்ளது. இதன் மேல் பகுதி கூரையால் வேயப்பட்டதாகும்.

இன்று அதிகாலை இந்த கூரைக்கு யாரோ தீ வைத்துவிட்டனர். இது குறித்துத் தகவல் கிடைத்தது மூத்த போலீஸ்அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சம்பவம் குறித்து அறிந்தவுடன் பாண்டிச்சேர் முதல்வர் ரங்கசாமி சம்பவ இடத்துக்கு வந்தார். தீவிர விசாரணைநடத்தி தீ வைத்தவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மசூதியை மீண்டும் சீரமைக்க அரசு உதவும் என அவர் உறுதியளித்தார்.

இந்தச் சம்பவத்தையடுத்து பெருமளவிலான முஸ்லீம்கள் அங்கு குவிந்தனர். இச் சம்பவத்தால் பல பகுதிகளில்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறுஉத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+