பொன்முடியின் வீட்டுக்கு சீல்: அண்ணன், நண்பர்கள் வீட்டிலும் சோதனை
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர்கள் பொன்முடியின் சென்னை வீட்டிலும் விழுப்புரம் வீட்டிலும் சோதனை நடத்திய லஞ்சஒழிப்புத்துறை போலீசார் விழுப்புரம் வீட்டுக்கு சீல் வைத்தனர்.
பொன்முடியின் அண்ணன் பேராசிரியர் தியாகராஜன், கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அவரதுஉறவினர்கள், இன்னொரு சகோதரரின் வீட்டிலும் சோதனை நடந்தது.
பொன்முடிக்கும், முதல்வர் ஜெயலலிாவுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக சட்டசபையில் கடும் வாக்குவாதம் நடந்து வந்தது.போக்குவரத்துத் துறை தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவதாம் நடந்தது. திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகஇருந்தவர் என்ற முறையில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் புகார்களுக்கு அவர் பதில் தந்தார்.
இதனால் ஜெயலலிதாவுக்கும் பொன்முடிக்கும் இடையே கடும் சொற்போர் நடந்தது. இந் நிலையில் பொன்முடி ஊழல் புரிந்துள்ளதாகவும்,அதற்கு ஆதாரம் இருப்பதாகவும், அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா வெள்ளிக்கிழமைசட்டசபையில் கூறியிருந்தார்.
இந் நிலையில் இரவிலேயே திடீரென பொன்முடியின் விழுப்புரம் மற்றும் சென்னை வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைநடத்தினர். விடிய விடிய இங்கு சோதனை நடந்தது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீட்டில் நடந்த சோதனையின்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.பொன்முடியைக் கூட வீட்டுக்குள் நுழைய போலீஸ் அனுமதிக்கவில்லை. அவரது வழக்கறிஞரும் வெளியிலேயே நிறுத்தப்பட்டார்.
சோதக்ைகுப் பிறகு வெளியே வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசவே மறுத்து விட்டனர்.
பொன்முடி கூறுகையில், இது பழி வாங்கும் நடவடிக்கையாகும். விழுப்புரம் அரசு அரிசி கிட்டங்கியில் நுழைந்து அங்கிருந்த அரிசி நல்லஅரிசிதான் என்று நான் நிரூபித்த நாள் முதல் என்னைப் பழி வாங்க ஜெயலலிதா முயன்று வருகிறார். அந்த தினத்தில் இருந்து நான் தான்டார்கெட்டாக இருந்து வருகிறேன். இன்று எனதபு வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50,000 எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்தேன். அதைஎடுத்துச் சென்றுவிட்டார்கள். வேறு எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றார்.
பொன்முடியின் விழுப்புரம் வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்ததால் வீட்டுக்கு சீல் வைத்தனர்.
அதேபோல, பொன்முடி அமைச்சராக இருந்தபோது அவரது உதவியாளர்களாக இருந்த அன்பு, ரவிக்குமார், ரவி கார்த்தி ஆகியோரதுவீடுகள், பொன்முடியின் நண்பர்களாண மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் பாலு, இவர்களின் கடைகளிலும் சோதனை நடந்தது. விடியவிடிய இந்த சோதனைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications