கைதிகள் தப்பிய சம்பவம்: மேலும் 2 பேர் கைது
ராமநாதபுரம்:
மதுரை அருகே அல்-உம்மா கைதிகள் தப்புவதற்கு உதவிய தீவிரவாதிகளில் ஒருவனும் அவனுக்கு அடைக்கலம்கொடுத்தவனும் ராமநாதபுரம் அருகே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பிடிபட்டனர்.
மதுரை அருகே திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் டாடா சுமோ காரில் வந்த சிலர், வெடிகுண்டுகளைவீசியும் துப்பாக்கியால் சுட்டும், இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகிய அல்-உம்மா தீவிரவாதிகளைக் கடத்திச்சென்றனர்.
ஆனால் அடுத்த இரு நாட்களிலேயே ஹைதர் அலியை சிவகங்கையில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும்கைதிகள் தப்புவதற்குக் காரணமாக இருந்த ஐ.டி.ஐ. மாணவன் ஜஹபர் சையது அலி மற்றும் நைனார் முகமது ஆகியஇரண்டு பேரையும் அடுத்தடுத்து வந்த நாட்களில் போலீசார் பிடித்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள பனைக்குளத்தில் சையது இப்ராகிம் என்பனைப் போலீசார் கைதுசெய்தனர். அல்-உம்மா கைதிகள் தப்பியதற்கு இவனும் முக்கியக் காரணமாக இருந்துள்ளான்.
இப்ராகிமுக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்கந்தர் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். இவன்பனைக்குளத்தில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறான்.
இவர்கள் இருவரும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றிரவுமுழுவதும் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இமாம் அலியைத் தேடி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர். அவன் மாறுவேடத்தில் ரயில் மூலம் தப்பிக்கலாம் என்று கருதும் போலீசார், ரயில்நிலையங்களிலும் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications