திமுகவினர் வீடுகளில் சிக்கிய ஆவணங்களின் மதிப்பீட்டுப் பணி தொடக்கம்
சென்னை:
தமிழகம் முழுவதும் திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்டஆவணங்கள் மற்றும் நகைகளை மதிப்பீடு செய்யும் பணியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் இன்று(திங்கள்கிழமை) மாலை தொடங்கினர்.
முன்னாள் திமுக அமைச்சர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், சமயநல்லூர் செல்வராஜ், சுரேஷ் ராஜன், மதுரைமாநகர முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்பட பல திமுக பிரமுகர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறைபோலீசாரும் அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இந்தத் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களிடமிருந்துஏராளமான ஆவணங்களும் நகைகளும் கைப்பற்றப்பட்டன.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் நகைகளின் மதிப்பீடு செய்யும் பணி இன்று மாலைதொடங்கியது.
தமிழக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆவணங்கள் மற்றும் நகைகளை மதிப்பீடு செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
