கடலூரில் கட்டுக்கட்டாக சிக்கிய கள்ள நோட்டுக்கள்: 5 பேர் கைது
கடலூர்:
கடலூரில் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற ஐ.டி.ஐ. மாணவர் மற்றும் காரைக்குடி பிரபல ரவுடி உட்பட 5 பேரைபோலீசார் கைது செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில்சனிக்கிழமை 2 வாலிபர்கள் ரூ.100 கொடுத்து மாற்றினர். அதன் பிறகு பிராந்தி கடையில் ரூ.100 கொடுத்து பிராந்திவாங்கினர்.
2 பேரையும் கண்காணித்த டெல்டா படை போலீசார் அவர்களை பஸ் ஸ்டாண்டில் வைத்து சோதனை செய்துவிசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த முபாரக் அலி (24), ஜெயப்பிரகாஷ் என்பதுதெரிய வந்தது. ஜெயப்பிரகாஷ் ஒரு ஐ.டி.ஐ. மாணவன்.
போலீசார் அவர்களை சோதனை செய்ததில் பாக்கெட்டில் இருந்த 100 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டு என்பதுதெரிய வந்தது. பின்னர் அந்த வாலிபர்கள் தங்கியிருந்த லாட்ஜூக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர்.
லாட்ஜில் தலையணைக்கடியில் 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கட்டு கட்டாக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.மேலும் 100 ரூபாய் தாள் அளவுக்கு வெள்ளை காகித கட்டுக்களும் இருந்தன. அவர்களிடம் இருந்து ரூ.25,000மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் அவர்களை விசாரித்ததில், காரைக்குடியை சேர்ந்த ராமநாதன் என்பவர், இவர்களிடம் ரூ.40,000கொடுத்தால் ரூ.1.20 லட்சம் தருவதாக அவர்களை ஏமாற்றியது தெரிய வந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் டெல்டா படை போலீசார் காரைக்குடியை அடுத்த செஞ்சவூரணி வடகரைஎன்ற பகுதிக்கு சென்று ராமநாதன் வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு ரூ.20 கள்ள நோட்டுக்களும், அதே அளவுக்கு தாள்களும் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.அங்கிருந்த கள்ள நோட்டுக்களை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் ராமநாதனையும், அவர்களது கூட்டாளிகளான மெய்யார் (45), முத்துசாமி (55) ஆகிய 3 பேரையும்போலீசார் கைது செய்தனர்.
அவர்களை மேலும் விசாரித்ததில் கடந்த 15 ஆண்டுகளாக இதே தொழிலை செய்து வருவதும், ராமநாதன் மீது பலவழக்குகள் நிலுவையில் இருப்பதும், சிவகங்கை மாவட்டத்தின் பிரபல ரவுடி என்பதும் தெரிய வந்தது.
பின்னர் 5 பேரையும், போலீசார் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் அவர்களை 15 நாள்காவலில் வைக்க உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications