ரெய்ட்.. ரெய்ட்..: நாடாளுமன்றத்தில் திமுக- அதிமுக எம்.பிக்கள் கடும் மோதல்
டெல்லி:
தமிழகத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கியப் புள்ளிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்ட் விவகாரம்நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பிக்களும் அதிமுக எம்.பிக்களும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இதனால் மக்களவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. அனைத்துக் கட்சி எம்.பிக்களும் திமுக, அதிமுகஎம்.பிக்கள் தமிழில் திட்டிக் கொள்வதைப் பார்த்துக் குழம்பிப் போய் அமர்ந்திருந்தனர்.
கடந்த 4 நாட்களாக முன்னாள் திமுக அமைச்சர்கள், பிரமுகர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுவருகிறது. இந்த சோதனை அதிமுக அரசின் பழிவாங்கல் என்று திமுக கூறி வருகிறது. இந்நிலையில் இந்தபிரச்சனை மக்களவையிலும் வெடித்தது.
இன்று மக்களவைக் கூட்டத்தின் கேள்வி நேரத்திற்கு பிறகு நடந்த விவாதத்தின்போது, திமுக தலைவர்களின்தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக வந்துள்ள பத்திரிக்கை செய்தியை குறிப்பிட்டு திமுக எம்.பி. சி.குப்புசாமி பேசினார்.
இதை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காகவேகுப்புசாமி தவறான குற்றம் சாட்டுவதாக அதிமுக உறுப்பினர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கடும் கூச்சலிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் லோக்சபாவில் கூச்சலும்,குழப்பமும் ஏற்பட்டது. திமுக உறுப்பினர்களை அமைச்சர் டி.ஆர்.பாலு சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை.
அப்போது அதிமுக எம்.பியான பி.எச்.பாண்டியன் பேசுகையில்,
பத்திரிக்கைகளில் செய்தியை வர வைப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்படுவதாக அந்த மாலைப் பத்திரிக்கையில் தவறான செய்தி போட்டுள்ளார். இது போன்ற தவறானகுற்றச்சாட்டுகளைக் கூறும் திமுகவினர் மிக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். திமுகவை சேர்ந்தசில முன்னாள் அமைச்சர்கள் ரூ.1,450 கோடி வரை ஊழல் செய்திருக்கிறார்கள் என்றார்.
இதற்கு திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்புக் தெரிவித்துப் பேசினர். பதிலுக்கு அதிமுகவினரும் கத்தினர். இதை திமுகஎம்.பிக்கள் வன்மையாக எதிர்த்ததையடுத்து, அங்கு மீண்டும் கூச்சல், குழப்பம் நிலவியது.
துணை சபாநாயகர் பி.எம். சயீத் நீண்ட முயற்சிக்குப் பின் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். திமுக-அதிமுக எம்.பிககள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூச்சலிட்டுக் கொண்டனர். என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத மற்ற மாநில எம்.பிக்கள் குழம்பிப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications