4 தலித் பஞ்சாயத்துக்களுக்கு ஏப்.8ல் தேர்தல்
மதுரை:
மதுரை மாவட்டத்தில் உள்ள 4 தலித் பஞ்சாயத்துகளுக்கு ஏப்ரல் 8ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கானஅறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அதிகாரியுமான ராமச்சந்திரன் மதுரையில் வெளியிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கோட்டக்கச்சியேந்தல் ஆகிய 4பஞ்சாயத்துகளும் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள்.
ஆனால் 3 பஞ்சாயத்துக்களிலும் தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையாக இல்லை. இதனால் மற்ற சமுதாயத்தினர்,தங்களது தலைவராக தாழ்த்தப்பட்டோர் இருப்பதா என்ற எண்ணத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்தால்கொலை செய்யப்படுவார்கள் என்று மிரட்டுகின்றனர். இதனால் தலித் மக்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முன்வரவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதும் இங்கு யாருமே வேட்பு மனுத்தாக்கல்செய்யவில்லை. இதனால் இங்கு தேர்தல் நடக்கவில்லை.
இந்த நிலையில் 3 பஞ்சாயத்துக்களிலும் தேர்தல் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தேதியை தற்போதுமாவட்ட ஆட்சித் தலைவர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
அதன்படி, 3 பஞ்சாயத்துக்களின் தலைவர்கள், உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வரும் 20ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. 27ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும்.
28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 30ம் தேதி மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.வாக்குப் பதிவு ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும். 9ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
புதிதாக தேர்வு செய்யப்படும் தலைவர்கள், உறுப்பினர்கள் ஏப்ரல் 18ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications