2வது நாளாக காவிரி டெல்டா விவசாயிகள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

பட்டுக்கோட்டை:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதைக் கண்டித்து, பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம்பகுதிகளைச் சேர்ந்த காவிரி டெல்டா விவசாயிகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தங்களது போராட்டத்தைத்தொடர்ந்தனர்.

தமிழகத்தில் 950 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி கடந்த சனிக்கிழமை அரசு உத்தரவிட்டது.

இதனால் கொதிப்படைந்த காவிரி டெல்டா விவசாயிகள் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல்நடத்தினர். இதில் சுமார் 2,000 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்தது. பட்டுக்கோட்டையில் திமுகசார்பில் விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள், அங்கு ஆர்ப்பாட்டம்நடத்தினர். பின்னர் நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுஒன்றையும் அவர்கள் கோட்டாட்சியரிடம் கொடுத்தனர்.

கும்பகோணத்திலும் இன்று நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மற்றும்திருவாரூரில் நாளை மறியல் போராட்டம் நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+