நெய்வேலி ஊழியர்கள் ஸ்டிரைக்கினால் மின் உற்பத்தி கடும் பாதிப்பு
நெய்வேலி:
நெய்வேலி அனல்மின் நிறுவனம் (என்.எல்.சி.) தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து அதன் ஊழியர்கள் நேற்று(திங்கள்கிழமை) இரவிலிருந்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து, மின் உற்பத்தில்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி. நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும் என்று வெளியான தகவலையடுத்து, அதை எதிர்த்துஅந்நிறுவன ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாக நெய்வேலியில் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பஸ்கள் எதுவும்இயக்கப்படவில்லை.
ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான போலீசார் நெய்வேலியில்குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் நிலக்கரி நிறுவனத்தின் வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்திய ஊழியர்கள் மீது போலீசார் நடத்தியதடியடியில் 11 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் 500 என்.எல்.சி. பொறியாளர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர்.
போலீசை பயன்படுத்தியது தவறு: சிதம்பரம்
இதற்கிடையே நெய்வேலி நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்க போலீசை அரசு பயன்படுத்தியதுதவறான செயல் என்று காங்கிரஸ் ஜனநாயக பேரவையின் பொதுச் செயலாளர் ப. சிதம்பரம் கூறினார்.
இது குறித்து சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதற்கு, போலீசை கொண்டு தடியடி நடத்தியது தவறானசெயலாகும்.
தனியார்மயமாக்கப்பட்டால் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.அதனால் தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் அச்சத்தை போக்குவதற்கு மத்திய அரசும், நெய்வேலி நிறுவனமும் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிதம்பரம் கூறினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications