ஜெ.வுக்காக நாக்கை "கட்" செய்தவருக்கு பேச்சு வந்தது
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்காக தன்னுடைய நாக்கை வெட்டிக் காணிக்கை செலுத்திய அதிமுக தொண்டர்,ஆபரேஷன் உதவியால் தற்போது மீண்டும் நன்றாகப் பேச ஆரம்பித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதால், சீர்காழியைச் சேர்ந்த ராஜாஎன்ற அதிமுக தொண்டர் தன்னுடைய நாக்கின் ஒரு பகுதியை அறுத்து திருப்பதி கோவிலில் காணிக்கைசெலுத்தினார்.
இத்தகவலை அறிந்த ஜெயலலிதா, ராஜாவை சென்னைக்கு நேரில் அழைத்து ஆறுதலும் அறிவுரையும் கூறி, ரூ.25ஆயிரம் உதவித் தொகையும் வழங்கினார்.
மேலும் அப்போலோ மருத்துவமனையில் ராஜாவுக்குச் சிகிச்சை அளிக்கவும் ஜெயலலிதா ஏற்பாடு செய்தார்.இதையடுத்து அம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜாவுக்கு, பிளாஸ்டிக் அறுவைச் சிசிச்சை நடந்தது.
டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்த இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம், ராஜா மீண்டும் பேசும் திறனைப் பெற்றார்.சிசிச்சை முடிந்ததும் மீண்டும் ஜெயலலிதாவைச் சந்தித்து அவர் நன்றி கூறினார்.
கழகத் தொண்டர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் தான் அதை விரும்பவில்லைஎன்றும் அப்போது ஜெயலலிதா கூறினார்.
இதற்கிடையே சிகிச்சைக்குப் பணம் பெற்றுக் கொள்ள டாக்டர் ஸ்ரீதர் மறுத்த போதிலும், மருத்துவமனைக்கட்டணங்களை எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியிலிருந்து வழங்க உத்தவிட்ட ஜெயலலிதா, சிகிச்சையளித்தடாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications