மனநலம் குன்றிய பெண் மாடியிலிருந்து விழுந்து பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள பான்யன் மனநலமற்றோர் மற்றும் தியோர் காப்பகத்தைச் சேர்ந்த மன நலம் குன்றிய இளம்பெண் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.
சென்னை முகப்பேரில் இந்த காப்பகம் உள்ளது. பான்யன் அமைப்பு நடத்தி வரும் இந்த காப்பகத்தில் சிலமாதங்களுக்கு முன்பு பால்கிஸ் பானு என்ற 23 வயது இளம் பெண் சேர்க்கப்பட்டார்.
மனநலம் குன்றிய பானு, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு காப்பகத்தின் 4-வது மாடியிலிருந்து திடீரென கீழேவிழுந்தார்.
இதில் தலையில் பலத்த அடிபட்ட பானு, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications