கார் பார்க்கிங் தகராறு: கட்டிப்புரண்டு சண்டை போட்ட வக்கீல்
சென்னை:
காரை பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வக்கீலுக்கும், கோர்ட்டுக்கு வந்தவருக்கும் இடையே பயங்கரசண்டை நடந்தது. கோர்ட் வளாகத்திலேயே இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
சென்னை எழும்பூரில் கோர்ட் உள்ளது. இந்த கோர்ட் வளாகத்தில் சண்முகராஜ் என்பவர் வெள்ளிக்கிழமை காலைகாரில் வந்தார். தனது காரை பார்க்கிங் செய்து கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு வக்கீல் சண்முகராஜின் கார்பக்கத்தில் தனது காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது காரை சற்றுத் தள்ளி நிறுத்துமாறு சண்முகராஜ் கூறியதாகத் தெரிகிறது. அப்போது இருவருக்கும்இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆபாச வார்த்தைகள் தாராளமாக பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வாய்த்தகராறு முற்றி இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். சினிமா பட ஷூட்டிங் பாணியில்இருவரும் மண்ணில் புரண்டு சண்டை போடுவதைப் பார்த்த அங்கிருந்த சில வக்கீல்கள், சண்டை போட்டுக்கொண்டிருந்த வக்கீலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர். சண்முகராஜை அவர்கள் நையப்புடைத்தனர்.
அந்த நேரத்தில் அங்கு நின்றிருந்த போலீஸ் உதவி கமிஷனர் பாலதண்டாயுதபாணி விரைந்து வந்து சண்டைபோட்டுக் கொண்டிருந்தவர்களை விலக்கி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இந்த சண்டை காரணமாக கோர்ட்வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications