63 கோவில்களில் பக்தர்களுக்கு இலவச "லஞ்ச்"
சென்னை:
தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு இலவச மதிய உணவு (அன்னதானம்) வழங்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா இன்று (சனிக்கிழமை) சென்னையில் துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் சார்பில் மாநிலத்திலுள்ள முக்கியக் கோவில்களில் பக்தர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும்திட்டம் நடைறைப்படுத்தப்படவுள்ளது. கோவில்களுக்கு வரும் நன்கொடையைக் கொண்டு இந்த மதிய உணவுஇலவசமாக வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவிலில்சனிக்கிழமை பிற்பகல் அன்னதானத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
அதே நேரத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ள 62 கோவில்கள் அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
அன்னதானத் திட்டம் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒழுக்க நெறிப் பாடமும் மாணவ,மாணவியருக்கு போதிக்கப்படவுள்ளது. உள்ளூர் ஆசிரியர்கள், சமய சொற்பொழிவாளர்கள் இந்த வகுப்பைநடத்துவார்கள். ஆன்மீக, ஒழுக்க நெறிகள் குறித்து போதனை நடத்தப்படும்.
இத்திட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களை ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications