சேலத்தில் சசிகலா பெயரில் பேரவை உதயம்
சேலம்:
சேலம் மாநகரில் சசிகலா பேரவை என்ற பெயரில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு மன்றம்அமைக்கப்பட்டுள்ளது.
சின்னக் குழந்தைக்கு ஜெயலலிதா முத்தமிடுவது போன்ற படம் மத்தியிலும், கருப்பு, சிவப்பு வண்ணத்திலும்அமைந்த கொடியுடன் கூடிய இந்த பேரவைக்கு ஜெ.ஜெ.-சசிகலா பேரவை என்று பெயரிடப்பட்டுள்ளது.
டாக்டர் சுப்ரமணியன் என்பவர் இந்த பேரவையின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் மற்ற நிர்வாகிகள்யாரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எங்களது தலைவி ஜெயலலிதாவின் ஒவ்வொரு நிமிடத்திலும் அவருடன் கூடவே இருந்து, ஜெயலலிதாவின் சுகம்,துக்கங்களில் பங்கெடுத்து வருபவர் சசிகலா. எனவேதான் அவரது பெயரில் இந்த பேரவை அமைக்கப்பட்டுள்ளதுஎன்று கூறுகிறார் சுப்ரமணியன்.
ஜெயலலிதாவை இந்தியாவின் பிரதமர் ஆக்குவதே தங்களது லட்சியம் என்றும் சுப்ரமணியன் கூறுகிறார். இந்தபேரவைக்கு அதிமுக தரப்பிலிருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளதாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications