Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரவை துவக்கியவர்களுக்கு ஜெ., சசி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா ஆகியோர் பெயரில் பேரவையைத்துவக்கியவர்களை அவர்கள் இருவருமே கண்டித்துள்ளனர்.

சேலம் மாநகரில் ஜெ.ஜெ.-சசிகலா என்ற பெயரில் ஒரு பேரவை சமீபத்தில் துவக்கப்பட்டது. இந்த பேரவைக்குடாக்டர் சுப்ரமணியன் என்பவர் தலைவராக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த பேரவைக்கு கொடியும்அறிமுகப்படுத்தப்பட்டது.

பத்திரிக்கைகளில் வெளியான இந்த செய்தியைக் கண்டித்து முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் தனித்தனியாகஅறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுகவுக்கோ, எனக்கோ, எனது சகோதரி சசிகலாவுக்கோ எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத ஒரு நபர்,என்னுடைய படத்தையும், பெயரையும், சசிகலாவின் பெயரையும் பயன்படுத்தி ஒரு அமைப்பைத்தொடங்கியுள்ளார்.

மேலும் அந்த அமைப்புக்கு கொடியையும் உருவாக்கி, அந்த கொடியின் நடுவில் என்னுடைய படத்தைப் பதித்து,அதிமுக கொடியைப் போன்ற சாயலில் அமைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உள்நோக்கத்தோடு இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ள அந்த நபர் மீது உரிய வகையில் சட்ட நடவடிக்கைகள்எடுக்கப்படும்.

எனக்கு உறுதுணையாக இருந்து வரும் சசிகலா பெயரால் பேரவை ஒன்று அனுமதி இல்லாமல்தொடங்கப்பட்டிருப்பது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எதிரிகளின் தூண்டுதலின்பேரில் ஆரம்பிக்கப்பட்ட செயலாகும். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

என்னுடைய ஒப்புதல் இல்லாமல் அதிமுக கட்சி கொடி வண்ணத்தில் என்னுடைய படத்தையும் பதித்துவெளியிட்டிருக்கிறார்கள். இத்தகைய விஷமச் செயல்களில் ஈடுபட்டவர்களோடு அதிமுகவினர் எந்த வகையிலும்தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெ.ஜெ.-சசிகலா பேரவை என்ற பெயரில் ஓர் அமைப்பு சேலத்தில் தொடங்கப்பட்டிருப்பதாக சில பத்திரிக்கைகள்பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

இவ்வாறு எனது பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் பேரவை என்னுடைய அனுமதியை பெற்று தொடங்கப்பட்டதுஅல்ல. அதனைத் தொடங்கியவர் யாரென்றே எனக்கு தெரியாது.

என்னுடைய அனுமதியையோ, என்னுடைய விருப்பத்தையோ கேட்காமலேயே என் பெயரில் பேரவைஆரம்பித்திருப்பவர்களின் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று சசிகலாஅவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+