மத்திய அரசிடம் அதிக நிதி கேட்க ஜெ.வுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:
நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அதிக நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமதாஸ் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு தனது வரி வசூலிப்பில் 29 சதவிகிதத்தை மாநில அரசுகளுக்கு மானியமாக வழங்குகிறது. தமிழகத்தில்உள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.2,500 கோடியை தமிழக அரசு, மத்தியஅரசிடம் கேட்டு பெற வேண்டும்.
அதே போல் தமிழக அரசு தேவையில்லாத பல செலவுகளை குறைக்க வேண்டும். வரும் 27ம் தேதி தமிழக அரசுபட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
அவர்களுக்கு பயன்படும் வகையில் பாமக ஒரு வரைவு நிதி நிலை அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.தமிழகத்தை மேம்படுத்துவதற்காககவும், நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாகவும் இந்த மாதிரி நிதி நிலைஅறிக்கை அமைந்துள்ளது.
தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றுவேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இது வெறும் பேச்சளவில்நில்லாமல், அதற்கான நிதி ஆதாரங்களை தமிழக அரசு திரட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
புதிய பட்ஜெட்டில் புதிய வரிகளை அமல் படுத்தாமல், நிலுவையில் உள்ள வருமான வரி ரூ.6,500 கோடியைவசூலிக்க அரசு முயல வேண்டும். இதற்காக தனிக்குழுக்களை அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications