இலங்கையிலிருந்து திரும்பும் 29 தமிழக மீனவர்கள்
நாகப்பட்டினம்:
இலங்கை கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண சிறைகளில் வாடிய 29 தமிழக மீனவர்கள்இன்று (செவ்வாய்க்கிழமை) வீடு திரும்புகின்றனர்.
அக்கரைப்பட்டு, ஜெகதாப்பட்டினம், கோடியக்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்த 29 மீனவர்களும் இந்தியஎல்லையைத் தாண்டி வந்து இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினர் இவர்களைக்கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர்.
அந்த மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து இம்மீனவர்களின்உறவினர்கள் தமிழக அரசிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து இவ்விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்குத் தமிழக அரசு கொண்டு சென்றது. மத்திய அரசும்உடனடியாக இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
இதையடுத்து கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யும்படியாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நாகப்பட்டினத்தில் இந்தியக் கடல் எல்லைக்கு அருகே இந்த 29 மீனவர்களையும் இலங்கைகடற்படையினர் இன்று ஒப்படைக்கின்றனர். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் இம்மீனவர்களைநேரில் சென்று வரவேற்கிறார்.
இதற்கிடையே, தமிழக மீனவர்கள் தங்களது படகுகளில் அடையாளம் தெரியும் வகையில் வண்ணம் பூசிக்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.42 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளதாக நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications