பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் 2002-03ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் பலமுக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று காலை சட்டசபை கூடியதும் சபாநாயகர் காளிமுத்து திருக்குறளைக் கூறி கூட்டத்தைத் தொடங்கினார்.

அதன் பின்னர் நிதி அமைச்சர் பொன்னையன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் சில முக்கியஅம்சங்கள்:

  • ஏப்ரல் 14 முதல் மலிவு விலை மது நிறுத்தப்படும்.

  • இந்தியாவில் தயாக்கப்படும் மது வகைகளை விற்பனை செய்யும் மதுக் கடைகளில் உரிம விதிமுறைகளுக்குட்பட்டு மது அருந்தும் இட வசதியை (பார்கள்) ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.

  • சென்னை, கோவையில் மகளிர் குற்றங்கள் குறித்து விசாரிக்க மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

  • சென்னையில் பன்னாட்டு தரத்துடன், தனியாருடன் இணைந்து அதிநவீன வசதிகள் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவமனை அமைக்கப்படும்.

  • பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அடுத்த நிதியாண்டிற்கும் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் விதத்தில் அடையாளச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். முதியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதியோர் நலக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். அதன் கீழ் முதியோர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கும் வகையில் சுகாதார கார்ட் (ஹெல்த் கார்ட்) திட்டம் அமல்படுத்தப்படும்.

  • கன்னியாகுமரி, திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஊனமுற்றோர் நலத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

  • கிராமச் சந்தைகளை (முந்தைய உழவர் சந்தைகள்) மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு.

  • விவசாய மேம்பாடு தொடர்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 3 ஆண்டு கால பயிற்சித் திட்டம் அறிமுகம்.

  • விவசாயிகளுக்கு பலனளிக்கும் விதத்தில் 1,000 ஊரகத் தொழில்கள் துவக்கப்படும்.

  • மாவட்டங்களில் உள்ள தொழில் மையங்கள் மேம்படுத்தப்பட்டு மாற்றியமைக்கப்படும்.

  • இந்தியாவிலேயே முதல் முறையாக, சிறு தொழில் முனைவோர்கள், இன்டர்நெட் மூலம் தற்காலிகச் சான்றிதழ் பெற வசதி செய்யப்படும்.

  • தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக 31,000 வீடுகள் கட்டித் தரப்படும்.

  • மாநிலம் முழுவதிலும் வீட்டு வசதி வாரியத்தால் கட்டித் தரப்பட்டுள்ள 15,000 வீடுகள் நிலை உயர்த்தப்படும்.

  • சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியில் வீடுகள் கட்டப்படும்.

  • சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீட்டு வசதி வாரிய வீடுகள் ரூ.25 கோடி செலவில் நிலை உயர்த்தப்படும்.

  • கிராம மகளிர் நலனுக்காக ஒருங்கிணைந்த துப்புறவு வளாகம் ரூ.183 கோடியில் கட்டப்படும்.

  • நகர்ப்புற துப்புறவு மேம்பாட்டுப் பணிகளில் தனியார் பங்கேற்புக்கு ஊக்குவிப்பு வழங்கப்படும்.

  • 500 பேருக்கு மேல் வசிக்கும் பகுதிகளில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சாலைகள் அமைக்கப்படும்.

  • சென்னை திருமயிலை முதல் வேளச்சேரி வரையிலான மாடி ரயில் திட்டத்தை புனித தாமஸ் மலை (பரங்கி மலை) வரை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.

  • தமிழக போக்குவரத்துக் கழகங்களில் அதிகரித்து வரும் பழைய பஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் ரூ.227.5 கோடி செலவில் 2,275 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

  • அரிசி, கோதுமை விற்பனைக்கு 2 சதவீத வரி விதிப்பு.

  • ரேஷன் அரிசி, கோதுமையின் விலை உயர்வில் மாற்றம் இல்லை.

  • வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் கொப்பரைத் தேங்காய் விற்பனைக்கு 1சதவீதத்திலிருந்து 2 சதவீத வரி விதிப்பு.

  • சித்தா, யுனானி மருந்துப் பொருட்களுக்கு 4 சதவீத வரி விதிப்பு.

  • சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, அச்சிடப்பட்ட கைக்குட்டை ஆகியவற்றுக்கு 4 சதவீத வரி விதிப்பு. ஜிம்னாசியக் கருவிகள், உபகரணங்களுக்கு 12 சதவீத வரி விதிப்பு.

  • மூங்கில், வணிக வரி முத்திரையிடப்படாத மிட்டாய்கள், கேக், ஐஸ்கிரீம், துணி, தகரத்தால் ஆன பொருட்கள் ஆகியவற்றிற்கு உள்ள வரி விகிதம் 4 சதவீதமாக குறைப்பு.

  • தேயிலை, காபி, ரப்பர் போன்ற தோட்டப் பயிர்களின் வரி விதிப்பு முறையில் மாற்றம் இல்லை. மின்சார மற்றும் மின்னணு பாகங்களுக்கு 10 சதவீத வரி விதிப்பு.

  • பொருளாதார நிபுணர் ராஜா செல்லையா தலைமையில் வசீரமைப்பு ஆலோசனை ஆணையம்.

  • புதிய வரி விதிப்புகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.690 கோடி கூடுதலாக கிடைக்கும். பட்ஜெட் பற்றாக்குறையாக ரூ. 640 கோடி இருக்கும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+