கோவையில் அமைதியான பந்த்: திருப்பூரில் 20 பஸ்கள் உடைப்பு
கோயம்புத்தூர்:
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்த முழுஅடைப்புக்கு இன்று (சனிக்கிழமை) அமைதியாக நடந்தது.
கோயம்புத்தூர்-புதூர் பகுதி ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரச் செயலாளரான முருகேசன் கடந்த வியாழக்கிழமைபடுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து கோயம்புத்தூரில் இன்று முழு அடைப்பு நடத்த இந்து முன்னணிஅமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.
அதன்படி இன்று காலை கோயம்புத்தூரில் முழு அடைப்பு தொடங்கியது. அத்தியாவசியப் பொருட்களான பால்,தண்ணீர் மற்றும் மின்சார சப்ளையில் தடங்கல் ஏதும் இல்லை. பஸ், ஆட்டோ போக்குவரத்தும் வழக்கம் போலஇருந்தது.
ஆனால் அரசு-தனியார் அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பள்ளி-கல்லூரிகள்போன்றவை இன்று மூடப்பட்டிருந்தன.
பதற்றம் மிகுந்த ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கோயம்புத்தூரின் பிறபகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்பு கோயம்புத்தூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் எதிரொலித்துள்ளது. திருப்பூர்,பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட பல ஊர்களிலும் இன்று முழுஅடைப்பு நடைபெற்றது.
இதற்கிடையே நேற்றிரவு திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த 10 அரசு பஸ்களை சில சமூக விரோதிகள்கல்வீசித் தாக்கி, உடைத்து நொறுக்கியுள்ளனர். இன்று காலையிலும் 10 பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
முன்னதாக, முழு அடைப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக தலைவர்கள் உள்ளிட்ட 300க்கும்மேற்பட்ட பாஜகவினரைப் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications