சென்னை சர்ச் உண்டியல் பணம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள நான்கு உண்டியல் பணத்தை யாரோ கொள்ளையடித்துச்சென்றுவிட்டனர்.

சென்னை-எழும்பூரில் உள்ளது தூய அந்தோணி சர்ச். புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை)இரவு சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் இரவு சர்ச்சை மூடிவிட்டு பாதிரியார்கள் சென்று விட்டனர். அதன் பிறகு இன்று காலை மீண்டும் சர்ச்சைத்திறந்தபோது, அங்கிருந்த நான்கு உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அந்த நான்கு உண்டியல்களிலுமிருந்து ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரவு பிரார்த்தனைமுடிந்ததும் திருடர்கள் சர்ச்சுக்குள்ளேயே ஒளிந்திருந்து பணத்தைத் திருடியுள்ளனர் என்று தெரிகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+