அரிசி வரி யாரையும் பாதிக்காது: ஜெ.
சென்னை:
அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மீதான வரி விதிப்பால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றுதமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அரிசி, பருப்பு மீது வரி விதித்தது குறித்துதிமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கண்டனம் தெரிவித்தார். இந்த வரி விதிப்பால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்என்றும் அவர் கூறினார்.
அவருடைய கண்டனத்திற்கு ஜெயலலிதா விளக்கமளித்து கூறியதாவது:
அரிசி, பருப்பு மீதான வரி விதிப்பால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
பிற மாநிலங்களில் அரிசி மீது வரி விதித்துள்ளதை விட குறைவாகவே தமிழகத்தில் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அரிசி, கோதுமை போன்ற பொருட்களுக்கு முதற்கட்ட விற்பனை வரியே விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வரிவிதிப்பு யாரையும் பாதிக்காது என்று ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications