முஷாரப் திடீர் ஆப்கானிஸ்தான் பயணம்
காபூல்:
தலிபான்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் முதல்முறையாகஇன்று ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார்.
தலிபான்களை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர் முஷாரப் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,அமெரிக்காவில் தாக்குதல் நடந்த பின்னர் தலிபான்களுக்கு எதிரான போரில் தன்னையும் சேர்த்துக் கொண்டார்முஷாரப்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும், அதன் அதிகாரிகளுக்கும் கடும் எதிர்ப்பு நிலவி வரும்நிலையில் திடீரென அவர் இன்று காபூல் சென்றார்.
ஆப்கான் இடைக்கால அதிபர் ஹமீத் கர்சாயின் அழைப்பின்பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.ஆனால், பாகிஸ்தான் அதிபருக்கு ஆப்கானிஸ்தான் ராணுவத்திலும், நார்த்தர்ன் அலையன்ஸ் படைகள் மத்தியிலும்கடும் எதிர்ப்பு நிலவி வருவதால் இந்தப் பயணம் கடைசி வரை மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
காபூல் வந்திறங்கிய முஷாரபுக்கு அமெரிக்கப் படைகள் தான் பாதுகாப்பு வழங்கி ஊருக்குள் அழைத்துச் சென்றன.
அவர் ஹமீத் கர்சாயை சந்தித்துப் பேச்சு நடத்திவிட்டு இன்று மாலையே பாகிஸ்தான் திரும்பி விடுவார் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications