பாலஸ்தீனம்: இந்திய ஆதரவைக் கோருகிறார் அராபத்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்:

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தீவிரத் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து, இந்தியாவிடம்ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத்.

கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேல் நகரங்களில் பாலஸ்தீனத் தீவிரவாதிகள் அடுத்தடுத்து மனித வெடிகுண்டுத்தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆறு மனிதக் குண்டுகள் வெடித்ததில் ஏராளமானவர்கள்கொல்லப்பட்டனர்.

இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தன்னுடைய தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தில் உள்ள ராமல்லா நகரில் புகுந்த இஸ்ரேல் படையினர், அங்கிருந்த அராபத்தின் அலுவலத்தைமுற்றுகையிட்டு தாக்கத் தொடங்கியுள்ளனர்.

அராபத்தின் பங்களாவையும் இஸ்ரேல் படையினர் முற்றுகையிட்டு, அங்கு பயங்கரப் பீரங்கித் தாக்குதலில்ஈடுபட்டு வருகின்றனர்.

அராபத் தங்களுடைய முக்கியமான எதிரி என்று கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷெரோன், பாலஸ்தீனம் மீதுபயங்கரவாதத்திற்கு எதிரான போர் துவங்கியுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் படையினரின் தீவிரத் தாக்குதலையடுத்து, அனைத்து உலக நாடுகளின் ஆதரவையும் அராபத் நாடத்தொடங்கியுள்ளார்.

இந்தியாவிடமும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார் அராபத். பாலஸ்தீன அமைச்சர் ஒருவர் இது தொடர்பாக நேற்றுஇரவு இந்தியப் பிரதமர் வாஜ்பாயை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+