காவிரி பிரச்சனை: தமிழக சட்டசபையில் அமளி
சென்னை:
காவிரி பிரச்சனை தொடர்பாக திமுகவும் அதிமுகவும் இன்று (திங்கள்கிழமை) கடுமையாக மோதிக் கொண்டதால்தமிழக சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் அலட்சியமாக இருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டை முதலில்வைத்தார் சட்டசபை திமுக துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன்.
காவிரி பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடி வந்த வழக்கறிஞர் பராசுரனைதற்போதைய அதிமுக அரசு நீக்கியுள்ளதை துரைமுருகன் கண்டித்தார்.
இவ்விவகாரத்தில் கர்நாடக அரசு சார்பாக வாதிடும் நரிமனுக்கு சரிக்கு சரியாக நின்று வாதிடுவதில் பராசுரன்தான்வல்லவர் என்றும் துரைமுருகன் அப்போது கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயலலிதா, தமிழக அரசுக்கு பராசுரன் சரியான ஒத்துழைப்புக்கொடுக்காததால்தான் அவரை நீக்கிவிட்டு வேறொரு வழக்கறிஞரை நியமித்தோம் என்று கூறினார். இப்போதுள்ளவழக்கறிஞரும் நன்றாக வாதிடக் கூடியவர்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு "பல்லுப் போன" காவிரி ஆணையக் குழுவை ஏற்றுக் கொண்டு, அதன் மூலம் சுயலாபம் சம்பாதிக்கவே திமுகதலைவர் கருணாநிதி நினைத்ததாக ஜெயலலிதா புகார் கூறினார்.
திமுகவின் இந்தப் போக்கினால்தான் தற்போது தமிழகம் காவிரிப் பிரச்சனைக்கு இன்னும் முடிவு காண முடியாமல்தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்றும் ஜெயலலிதா சட்டசபையில் கூறியபோது, திமுக எம்.எல்.ஏக்கள்மேஜைகளைத் தட்டி அமளி எழுப்பினர்.
கடந்த 1992ல் அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக, காவிரிக் கண்காணிப்புக் குழுவை ஏற்றுக் கொள்ளாததுதான்அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்று துரைமுருகன் கூறியவுடன், அதைக் கடுமையாக ஆட்சேபித்துஅதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து இரு தரப்பிலிருந்தும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கவே, சட்டசபையில்பெரும் அமளி ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனையை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வமும்சட்டசபை திமுக தலைவர் அன்பழகனும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சட்டசபை ஒருவழியாக அமைதியானது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications