நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க முடியாது: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நேரடி நெல் கொள்முதல் நிலைங்களை மீண்டும் திறக்கவே முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா இன்று(செவ்வாய்க்கிழமை) உறுதியாகக் கூறிவிட்டார்.

தமிழகம் முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களை சமீபத்தில் தமிழக அரசு மூடிவிட்டது. இதனால்விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அரசின் இந்த செயலை எதிர்த்து பல கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன. மீண்டும்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இது குறித்து சட்டசபையில் இன்று ஜெயலலிதா கூறியதாவது:

நேரடி கொள்முதல் நிலையங்களைப் பயன்படுத்தி வியாபாரிகளும், தரகர்களும் வெளிமாவட்டங்களில் இருந்துநெல்லை கொண்டு வந்து இங்கு விற்கின்றனர்.

இதனால் தான் கொள்முதல் நிலையங்களை மூட அரசு முடிவு செய்தது. மீண்டும் கொள்முதல் நிலையங்களைதிறப்பதாக இல்லை.

அதற்கு பதிலாக விவசாயிகள் தங்கள் நெல்லை தாலுகா சிவில் சப்ளை கோடவுனுக்கு கொண்டு செல்ல வேண்டும்.இந்த போக்குவரத்து செலவுக்காக ஒரு குவிண்டாலுக்கு ரூ.15ஐ விவசாயிகளுக்கு தர அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது சம்பா சீசனில், 9,79,590 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரசு கோடவுனில் 9 மாதத்திற்குதேவையான அரிசி உள்ளது என ஜெயலலிதா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+