குஜராத்தில் அமைதிப் பகுதிகளிலும் வன்முறை
அகமதாபாத்:
குஜராத்தில் வன்முறை தொடர்ந்து வருகிறது.
இதுவரை அமைதி நிலவி வந்த பகுதிகளிலும் இப்போது வன்முறை பரவ ஆரம்பித்திருக்கிறது.
கடந்த ஒரு மாதமாக இந்த மாநிலத்தில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. இதுவரை 1,100 பேர் இந்தவன்முறைகளில் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாகவீடுகளை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வன்முறை தொடர்ந்து வந்தாலும் அம் மாநில அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வேடிக்கைபார்த்து வருகிறது. மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு வன்முறையைத் தடுக்க முழு அளவில் தவறிவிட்டதாகதேசிய மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
சிறுபான்மையினத்தினர் மீதான பல தாக்குதல்கள் அரசின் முழு ஆதரவுடன் நடந்திருப்பதாகக் கூறியுள்ள மனிதஉரிமை ஆணையம இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.
ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இதுவரை அமைதியாக இருந்து வந்த கட்ச் பகுதியிலும் நேற்று வன்முறை பரவியது. இம்மாவட்டத்தில் வன்முறை பரவாமல் தடுத்ததில் மாவட்ட எஸ்.பிக்கு முழுப் பொறுப்புள்ளதாக மனித உரிமைகமிஷன் பாராட்டி இருந்தது.
இந் நிலையில் அவரை கடந்த வாரம் அம் மாநில அரசு இடமாற்றம் செய்தது. இதனால் வன்முறைக்குத் துணைபோகாத அதிகாரிகளை மாநில அரசு குறி வைத்துளளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த எஸ்.பி. மாற்றப்பட்ட ஒரு வாரத்தில் இம் மாவட்டத்திலும் முதல்முறையாக வன்முறை ஊடுருவியுள்ளது.இங்கு நேற்றிரவு ஒரு கோவிலில் சாமி சிலை உடைக்கப்பட்டது.
இதையடுத்து இரு மசூதிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சாலைகளில் வன்முறையில்இறங்கினர். கல்வீச்சும், கத்திக் குத்துச் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications