மீண்டும் பறக்கப் போகும் எல்.சி.ஏ. போர் விமானம்
பெங்களூர்:
இந்தியா தயாரித்துள்ள போர் விமானமான எல்.சி.ஏ. இந்த வாரம் மீண்டும் பறக்கவிடப்பட்டுசோதனையிடப்படவுள்ளது.
இந்த விமானம் கடந்த ஜனவரியில் முதல் முதலாக வெற்றிகரமாகப் பறந்தது.
இம்முறை 260 கி.மீ. வேகத்தில் இந்த விமானம் பறக்கும் என இந்த விமானத் தயாரிப்புத் திட்டத்துக்கானஇயக்குனர் கோட்டா ஹரிநாராயணா தெரிவித்தார். இந்த விமானத்தை இயக்கப் போகும் பைலட் சிறப்புப்பயிற்சிகள் எடுத்து வருகிறார்.
இந்திய விமானப் படைக்கு இந்த ரகத்தைச் சேர்ந்த 200 விமானங்களும், 20 பயிற்சி விமானங்களும்தேவைப்படுகின்றன. அதே போல கடற்படையும் 30 விமானங்களைக் கேட்டுள்ளது. 2006ம் ஆண்டில் இந்தவிமானங்கள் தயாரிக்கப்பட்டு விமானப் படைக்கும், கடற்படைக்கும் தரப்பட்டுவிடும்.
இந்த விமானத்தின் 70 சதவீத பாகங்கள் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில்உள்ள ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி தான் இந்த விமானத்தைத் தயாரித்து வருகிறது. இந்தியபாதுகாப்புத்துறையின் கீழ் இந்த ஏஜென்சி இயங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications