பிற்பகல் 1 முதல் 2 மணி வரை ஜெ.யிடம் மனு தரலாம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரடியாக மனுக்களைக் கொடுக்க விரும்புபவர்கள், தினமும் பிற்பகல் 1 முதல் 2மணிக்குள் தலைமைச் செயலகத்தில் வந்து கொடுக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுக்க விரும்புவோர் தலைமைச் செயலகத்தில் தினந்தோறும் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்கவிரும்புவோருக்கு வசதியாக, பிற்பகல் நேரத்தை ஒதுக்கி தர முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
எனவே பொதுவாக முதல்வரிடம் மனு கொடுக்க விரும்புவோர், தலைமைச் செயலகத்தில், முதல்வரின்தனிப்பிரிவில் எல்லா வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மனுக்களை கொடுக்கலாம்.
மேலும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனுக்களை கொடுக்க விரும்புபவர்கள், தலைமைச் செயலகத்தில் நுழைவுவாயிலுக்கு அருகில் பிற்பகல் 1 முதல் 2 மணி வரை அவரிடம் மனுக்களை கொடுக்கலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று பல நாட்கள் அலைந்து திரிந்த கோயம்புத்தூர்தம்பதி வேலு-நளினி தற்கொலைக்குப் பிறகு இந்த முக்கியமான முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications