ராமதாசுக்கு கொலை மிரட்டல்
சென்னை:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ரூ.10 லட்சம் கேட்டு வந்த கொலை மிரட்டலை அடுத்து, அவருக்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டிவனத்தில் உள்ள ராமதாஸின் தைலாபுரம் தோட்ட வீட்டுக்கு கடந்த 27ம் தேதி ஒரு மர்ம கடிதம் வந்தது.ஷெரீப் என்ற பிஸ்மில்லா என்பவரின் பெயரில் அந்த கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து கோடிக் கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகிறது.கொள்ளையடித்த பணத்தில் எனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டும்.
அப்படித் தராவிட்டால் திண்டிவனத்திற்கோ, சென்னைக்கோ உயிருடன் செல்ல முடியாது. இந்தப் பணத்தை எண்.53, வானொலி மந்திர் தெரு, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் என்ற முகவரியில் உள்ள எனது மனைவியிடம்ஒப்படைக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள சர்ச் தெருவுக்கு சென்று ஓய்வு பெற்றஸ்டேஷன் மாஸ்டர் பாய் வீடு எது என்று கேட்டால், எல்லோரும் அந்த முகவரியை தெரிவிப்பார்கள். அங்குவசிக்கும் எனது தாய், தந்தையிடமும் இந்தப் பணத்தை தர வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் அந்தக் கடிதத்தில் முகவரி எதுவும் எழுதப்படவில்லை. இது குறித்து திண்டிவனம் போலீசில் புகார்கொடுக்கப்பட்டது.
இந்த கொலை மிரட்டல் கடிதம் குறித்து விசாரித்து வரும் போலீசார், ராமதாசுக்கு பலத்த பாதுகாப்பு அளித்துவருகின்றனர். ராமதாசின் வீடு, அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications