இந்திய-இலங்கை தமிழர்களிடையே தொப்புள் கொடி உறவு: வைகோ
ஈரோடு:
இந்திய-இலங்கைத் தமிழர்களிடையே இருப்பது தொப்புள் கொடி உறவு, அதை யாராலும் பிரிக்கவே முடியாதுஎன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
ஈரோடு அருகே பவானியில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து உண்டு. இப்பிரச்சனையில் இனியும் நாம்தொடர்ந்து ஒரே அணுகுமுறையைப் பின்பற்ற முடியாது. நாங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறோம்.
கடந்த 30 ஆண்டுக் காலத்தில் இலங்கையில் நடந்த வன்முறைகளுக்கு அளவே இல்லை. அந்தத் தமிழர்கள் பட்டதுன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் நம் இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும் இடையே இருப்பது தொப்புள்கொடி உறவாகும். இதை யாராலும் பிரிக்க முடியாது.
தற்போது இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பிரதமரான பிறகு அங்கு அமைதிக்கான சூழ்நிலைஉருவாகியுள்ளது.
புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்தியாவிலேயே அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள உல்பா தீவிரவாத இயக்கமும் தடை செய்யப்பட்ட இயக்கம்தான். ஆனால் நோய் வாய்ப்பட்டநிலையில் உள்ள தன் தந்தையைப் பார்ப்பதற்காக அந்த இயக்கத்தின் தலைவன் வருவது இங்குஅனுமதிக்கப்பட்டுள்ளது.
அதனால் விடுதலைப்புலிகள் இந்தியாவில் தங்கி பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவிதமான தவறும் இல்லைஎன்று வைகோ பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications