சாப்பாடு பிரமாதம்.. பேஷ் பேஷ் !!
சென்னை:
தமிழக கோவில்களில் அரசு அறிவித்துள்ள அன்னதானத் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.பரிமாறப்படும் உணவு மிகப் பிரமாதமாக இருப்பதாக பக்தர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 63 கோவில்களில் இந்த அன்னதானத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.இதற்கான செலவை பக்தர்களே ஏற்கும் வகையில் இக் கோவில்களில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மிக ஆர்வமாக இந்த உண்டியலில் பணம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். தங்கள் திருமண நாள், பிறந்தநாளை நாலு பேருக்கு நல்லது செய்து கொண்டாட விரும்பும் மக்கள் இந்த உண்டியல்களில் காணிக்கை செலுத்தஆரம்பித்துள்ளனர்.
கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய இத் திட்டம் பக்தர்களின் நிதியுதவியுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.பலர் ஒரு நாள் சாப்பாட்டுச் செலவையே ஏற்றுக் கொள்வதாக அறிவித்து அதற்கான பணத்தைத் தந்துவிடுகின்றனர்.
உதாரணமாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஏப்ரல் மாதம் முழுவதற்கும் அன்னதானச்செலவுகளை ஏற்க பக்தர்கள் பணம் கட்டிவிட்டனர். இங்கு அன்னதான செலவை ஏற்க விரும்புவர்கள் அடுத்தமாதம் வரை காத்திருக்க வேண்டிய அளவுக்கு நிலைமை உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இந்தக் கோவில்களில் போடப்படும் உணவும் மிக நன்றாக இருப்பதாக அன்னதானத்தைஉண்ணும் பக்தர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இக் கோவில்கள்ல் அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு, அப்பளம், மோர், ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகின்றன.
சென்னையில் கோவில்களில் இந்த அன்னதானத்தை உண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களும் சாப்பாடு பிரமாதம்என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications