பஞ்சாயத்துத் தேர்தல்: மரண பயத்தில் தலித்கள்
சென்னை:
தலித்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோருக்குபெரும்பான்மையினராக உள்ள இன்னொரு ஜாதியினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டி, பாப்பாபட்டி உள்ளிட்ட 3 பஞ்சாயத்துகளில் தலைவர் பதவி தலித்களுக்குஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரிசர்வ் தொகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் இன்னொரு ஜாதியினர்தலித் ஒருவர் தங்களுக்கு தலைவராக வருவதை ஏற்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
இந்த ஜாதியைச் சேர்ந்த சில அடாவடி ஆசாமிகளின் மிரட்டலினால் இந்தத் தொகுதியில் போட்டியிடக் கூடதலித்கள் யாரும் முன் வரவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்தால் கொலை செய்யப்படுவோம் என்ற அச்சத்தில்இங்கு தலிகள் யாரும் போட்டியிடவில்லை.
இதனால் இங்கு தேர்தலே நடக்காமல் இருந்து வருகிறது. அடாவடி செய்து வரும் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தசிலர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களிடம் அரசு கெஞ்சி வருகிறது. அரசின் கெஞ்சலுக்குப் பின்னரும் இந்தஅடாவடி ஆசாமிகள் இறங்கி வரவில்லை.
இந் நிலையில் இங்கு வரும் 8ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இந்த 3 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள்நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த வேட்பாளர்களுக்கு மீண்டும் அந்த அடாவடிக் கும்பல் கொலை மிரட்டல் விதித்துள்ளது. இதில் தலித்வேட்பாளர்களுக்கு பாதுகாப்புத் தர வேண்டிய போலீசாரும் கூட தலித்களுக்கு எதிராக நடந்து கொள்வதாக புகார்எழுந்துள்ளது.
தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளிலும் பல தலித்கள் கஞ்சா வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள உள்ளே தள்ளப்படு வருகின்றனர்.
எனவே, தலித் எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட மாநில போலீசாரை நம்பிப் பயனில்லை என்பதால் மத்தியபோலீஸ் பாதுகாப்பு வேண்டும் என விடுதலைச் சிறுத்தை அமைப்பின் தலைவர் திருமாவளன் கோரியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ராம்மோகன் ராவைச் சந்தித்தும் அவர் இன்று மனுக் கொடுத்தார்.
கோர்ட் அதிரடி தீர்ப்பு:
இந் நிலையில் தலித் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கி தேர்தல் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல்ஆணையத்துக்கு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், தலித்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications