கருணாநிதி கைது விவகாரம்: ஜெ. அரசின் வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
கடந்த ஜூன் மாதம் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டது தொடர்பாக ஜெயலலிதா அரசு தொடர்ந்தவழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்ததாக கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை தமிழக போலீசார் ஜூன் மாதம்நள்ளிரவில் வீட்டில் புகுந்து அடித்து, உதைத்து கைது செய்தனர்.
போலீசாரின் இந்த கொடும் செயலை தேசிய மனித உரிமைக் கமிஷன் கண்டித்தது. இது குறித்து விளக்கம் கேட்டுஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், மனித உரிமைக் கமிஷன் இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிடுவதாகக் கூறி ஜெயலலிதா அரசுசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை இன்னும் தொடங்கவில்லை.
இந் நிலையில் இந்த வழக்கு விசாரணையை நிறுத்த வேண்டும் என்று கோரி கருணாநிதிக்கும் மனித உரிமைஆணையத்துக்கும் ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள்ஜெயலலிதா அரசின் மனு மீதான விசாரணையை நிறுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications