இந்தியப் படைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

எல்லையில் இந்தியப் படைகளின் 42 கண்காணிப்புக் கூடாரங்கள் மீது நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர்துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் ஒரு பெண் காயமடைந்தார்.

ஜம்மூ மாவட்டத்தில் உள்ள கனாசாக், கோர், அக்னூர், ராம்கர், ஆர்.எஸ்.புரா, சச்சேட்கர், சம்பா, அர்னியா ஆகியபகுதிகளில் அமைந்துள்ள 33 ராணுவ கண்காணிப்புக் கூடாரங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரகபீரங்கிகள், துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இந்தியப் படைகள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டை இன்று காலை வரைநீடித்தது. இதில் ராணி தேவி என்ற எல்லையோரக் கிராமப் பெண் காயமடைந்தார்.

இது தவிர ரஜெளரி மாவட்டத்திலும், கதுவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியிலும் உள்ள 7 ராணுவ கண்காணிப்புமையங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இங்கும் இந்தியப் படைகள் பதில் தாக்குதல்நடத்தின.

முஷாரப் ஆட்சியில் நீடிக்கத் திட்டம்:

இந் நிலையில் விரைவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவேன் என்று கூறிக் கொண்டு நவாஸ் ஷெரீப்ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தனது ஆட்சி காலத்தை மேலும் 5 ஆண்டுகள்நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதற்கு ராணுவ ஜெனரல்களின் ஆதரவைப் பெற்றுவிட்ட முஷாரப் சில அரசியல் கட்சித் தலைவர்களையும்அழைத்துப் பேசி வருகிறார்.

இன்று காலை இது தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் பதவிக்குத் தேர்தல் நடத்தினாலும் ஜனாதிபதி பதவியில் தொடர்ந்து நீடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+