ரவுடி பாண்டியன் அதிமுகவில் இருந்து நீக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரான ரவுடி மிசா பாண்டியன் அதிமுகவைவிட்டுநீக்கப்பட்டுள்ளார்.

எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் இவர். ஆனால், அந்த மிசா சட்டத்தையேபெயருக்கு முன்னால் பந்தாவாகப் போட்டுக் கொண்டு மிசா பாண்டியன் என்று மதுரைக்குள் சுற்றி வந்துரவுடித்தனம் செய்து கொண்டு திரிபவர் இவர்.

மதுரையில் பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வம் உள்பட பலருக்கு ஆபத்பாந்தவனாக இருந்து செயல்பட்டுவருபவர் மிசா பாண்டியன். ரவுடிகள், கந்துவட்டிக் கும்பல், மோசடி காண்ட்ராக்டர்களுக்கு அனைத்துஉதவிகளையும் செய்து வருபவர்.

திமுக ஆட்சியில் துணை மேயராக இருந்தபோது மேயராக இருந்த குழந்தைவேலுவை பலர் முன்னிலையில்அடித்து அவமானப்படுத்தியவர் இவர்.

இதையடுத்து இவரை திமுக தலைவர் கருணாநிதி கட்சியைவிட்டு நீக்கினார். பின்னர் அழகிரி நெருக்குதலால்மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் திடீரென அதிமுகவுக்குத் தாவினார்.

ஒரு கொலை வழக்கில் கைதாகி விடுதலையாகி இப்போது தான் வெளியில் வந்தார்.

இந் நிலையில் வியாபாரி ஒருவரை தாக்கியது தொடர்பாக இப்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.அதிமுகவைச் சேர்ந்த ஜெயராம் (வயது 50)என்பவர் பாண்டியன் துணை மேயராக இருந்தபோது மாநகராட்சிக்கடை ஒன்றை ஒதுக்கக் கோரியுள்ளார்.

இதற்காக அவரிடம் இருந்து ரூ. 28,000-தை வாங்கியுள்ளார் பாண்டியன். ஆனால், கடை ஒதுக்கித் தரவில்லை.மேலும் கொடுத்த பணத்தையும் தரவில்லை. பணம் கேட்டு ஜெயராம் அலையாய் அலைந்தார். இதையடுத்துவெறும் ரூ. 12,000த்தை மட்டும் தந்தார் பாண்டின்.

மீதிப் பணத்தைக் கேட்டு ஜெயராம் சில தினங்களுக்கு முன் பாண்டியனிடம் சென்றபோது அவரை பாண்டியனும்அவரது அடியாள் கும்பலும் சேர்ந்து பயங்கரமாகத் தாக்கியுள்ளது. அவரது நெஞ்சில் சிகரெட்டைக் கொண்டு சூடும்போட்டுள்ளனர். பணத்தைக் கேட்டால் கொலை செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து ஜெயராமன் அழுதவாறே காவல் நிலையத்தில் புகார் தந்தார். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர்என்பதால் போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் அவரைக் கட்சியை விட்டு முதல்வர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+