வர்றியா... வாலிபரை அழைத்த 3 பெண்கள் கைது
கோவை:
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞரை விபச்சாரத்துக்கு அழைத்த இரு சகோதரிகள் உள்பட 3பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை வ.உ.சி. பூங்கா அருகே தேமே என்று தான்பாட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் சரவணன் என்றவாலிபர்.
அப்போது எதிரில் வந்த 3 விபச்சாரப் பெண்கள் அவரிடம் சில்மிஷம் செய்தனர். அவரை விடுதிக்கு வருமாறுஅழைத்தனர். இதனால் நடுநடுங்கிப் போன சரவணன் அவர்களிடமிருந்து தப்பியோடினார்.
எதிரில் வந்த போலீஸ் ஜீப் முன் போய் நின்றார். தன்னை விபச்சாரத்துக்கு அழைத்த 3 பெண்கள் மீதும் நடவடிக்கைஎடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அதே ஜீப்பில் அவரை ஏற்றிக் கொண்டு வ.உ.சி. பூங்காவுக்கு போலீசார் வந்தனர். அந்த 3பெண்களும் அங்கேயே நின்று கொண்டு தனியே வந்த ஆண்களை மடக்கிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மூன்று பேரும் ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
அவர்கள் பெயர் விவரம்:
1. சப்னா சிங் (வயது 33), ஹைதராபாத்தில் ரெட் ஹாஸ்டலில் தங்கியுள்ள இவர் அவ்வப்போது மும்பை சென்றுஹிந்திப் படங்களில் துணை நடிகையாகவும் நடித்து வந்துள்ளார்.
2. அருணா (வயது 23)
3. ஜெயா (வயது 24)
இதில் அருணாவும் ஜெயாவும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர்கள். இருவரும் உடன் பிறந்தசகோதரிகள்.
இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கோவைக்கு அழைத்து வந்த புரோக்கரைப் பிடிக்கும்முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications