சூரியன் சிந்திய பனிக்கட்டிகள் !

Subscribe to Oneindia Tamil

தேனி:

கோடை வெயில் வறுத்தெடுக்கும் நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று பனிக்கட்டிகளுடன் கூடிய மிக பலத்தமழை பெய்தது.

தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் இந்த மழை பெய்ய பனிக்கட்டிகள் கற்களைப் போல மிக வேகத்தில் வந்து வந்து விழுந்தன.

இந்த கடும் மழைக்கு நூற்றாண்டு பழைய ஆலமரம் சரிந்தது. தேனி நகரம் அரி நகரில் இருந்த இந்த ஆலமரம்வேறோடு சாய்ந்தது. பல வீடுகளின் தகரக் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறந்தன. கூரை வீடுகள் மிக பலத்தசேதமடைந்தன.

பல மாதங்களாக கடும் வெயிலில் தவித்து வரும் மக்கள் இந்த மழையை ஆராவார்ததுடன் வரவேற்றனர். மக்கள்கூட்டம் கூட்டமாக தெருக்களில் நின்று மழையில் நனைந்தனர்.

இதனால் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது. சூறாவளியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இந்த மாவட்டத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. மழை காரணமாக மாம்பழ உற்பத்தி அதிகரிக்கும் என்பதால்விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+