ஆடிட்டரை ஜெ. தாக்கிய வழக்கு தள்ளுபடி
சென்னை:
ஆடிட்டர் ராஜசேகர் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கைசைதாப்பேட்டை 18வது நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதாவின் ஆடிட்டராக இருந்த ராஜசேகர், கடந்த 1999ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி ஜெயலலிதாவின்போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து தாக்கப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து தன்னை ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் தாக்கியதாக தேனாம்பேட்டை போலீசாரிடம்புகார் செய்தார்.
இவ்வழக்கில் ஜெயலலிதா முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். மேலும் அவருடைய தோழியான சசிகலா,இவருடைய மருமகன் மகாதேவன் மற்றும் வெங்கட் ஆகியோர் மற்ற குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு தொடர்பாக, குற்றப் பத்திரிக்கையும" தாக்கல்செய்யப்பட்டது.
ஆனால் தங்கள் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஜெயலலிதா உள்பட நான்கு பேரும்,இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி மனு செய்தனர்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications