தனியார் தொலைபேசி சேவை: ஜெ.யிடம் பேசினார் கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நேற்று துவக்கி வைக்கப்பட்ட தனியார் தொலைபேசி சேவை மூலம் தமிழக முதல்வர்ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இன்று (வியாழக்கிழமை) பேசினார்.
பாரதி டெலிநெட் நிறுவனம் தொடங்கிய இந்தத் தனியார் தொலைபேசி சேவையை ஜெயலலிதா நேற்றுஅறிமுகப்படுத்தினார்.
இந்தத் தனியார் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தி இன்று ஜெயலலிதாவை அழைத்து கிருஷ்ணா பேசினார்.
கர்நாடகத்திலும் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதற்காக கிருஷ்ணாவுக்கு ஜெயலலிதா வாழ்த்துக் கூறினார்.
பின்னர் இருவரும் சிறிது நேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications