ஏப்ரல் 10ல் நிருபர்களைச் சந்திக்கிறார் பிரபாகரன்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரிக்கை நிருபர்களை வரும் 10ம் தேதி சந்திக்கவுள்ளார்விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

புலிகளின் கைவசமுள்ள கிளிநொச்சியில் (வடக்கு இலங்கை நகரம்) உலக செய்தி நிறுவனங்கள் மற்றும் பத்திரிக்கைநிருபர்களுக்கு பிரபாகரன் பேட்டி அளிக்கிறார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்தும், இந்த ஒப்பந்தத்தை புலிகள்மீறுவதாக வந்து கொண்டிருக்கும் புகார்கள் குறித்தும் தாய்லாந்தில் எந்த நேரத்திலும் துவங்கவிருக்கும் அமைதிப்பேச்சுவார்த்தை குறித்தும் நிருபர்களின் கேள்விகளுக்கு பிரபாகரன் பதிலளிக்கவுள்ளார்.

புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கமும் பிரபாகரனுடன் இந்த நிருபர்கள் சந்திப்பின்போதுஇருப்பார்.

அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி மேலும் துரிதமாகவும் வெற்றிகரமாகவும் நடப்பதற்கு பிரபாகரனின் இந்தநிருபர்கள் சந்திப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று பாலசிங்கம் நம்பிக்கை தெரிவித்தார்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின் பிரபாகரனைச் சந்திப்பதற்கு நிருபர்களும் வெகு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+