பாரதி கண்ட புதுமைப் பெண் ஜெ. !
சென்னை:
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக முதல்வர் ஜெயலலிதாவைக் காண்கிறேன் என்று தமாகா எம்.எல்.ஏவானவிநாயகமூர்த்தி சட்டசபையில் பேசினார்.
தமிழக பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தின்போது விநாயகமூர்த்தி பேசியதாவது:
நிதி நெருக்கடியான சூழ்நிலையில் மிகுந்த பொறுப்புட" நிதி அமைச்சர் பொன்னையன் இந்த ஆண்டுக்கானபட்ஜெட்டைத் தந்துள்ளதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.
அதே சமயம் அனைத்துத் துறைகளுக்கும் நிதியை எப்படியெல்லாம் செலவிட வேண்டும் என்பதை அலசிஆராய்ந்து பட்ஜெட்டுக்கே சிறப்பைத் தந்தவர் நம் முதல்வர்தான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
புதிய லட்சியத்துடன் ஆட்சியில் புதிய வழிமுறைகளோடு ஆளத் தொடங்கியுள்ள முதல்வரை பாரதி கண்டபுதுமைப் பெண்ணாகத்தான் நான் காண்கிறேன். புதுமைப் பெண்கள் எப்போதுமே வீழ்ச்சி அடைவதில்லைஎன்பதைப் பாரதி குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் சக்தியை நாடறியும். மத்திய அரசிடம் அவர் கேட்டுள்ள ரூ.3,000 கோடி தங்கு தடையின்றி கிடைக்கும்.அந்த அளவிற்கு சக்தி மிக்கவர் ஜெயலலிதா.
கடந்த ஒரு ஆண்டாக தாங்கள் சந்தித்த சோதனைகள், சங்கடங்கள் அனைத்தையும் கடந்து வெற்றிக் களிப்போடும்,வைர நெஞ்சத்தோடும் லட்சியத்தின் சிகரத்தைத் தொடும் நிலையில் இந்த அவையில் அமர்ந்துள்ளீர்கள் என்றுகடைசியாக ஜெயலலிதாவை நேரடியாகவே பாராட்டிப் பேசினார் விநாயகமூர்த்தி.












Click it and Unblock the Notifications