வேலூர் அருகே திமுக பஞ்சாயத்து தலைவி படுகொலை
ஏலகிரி:
வேலூர் மாவட்டம் ஏலகிரி பெண் பஞ்சாயத்துத் தலைவரான லட்சுமி கத்தியால் குத்திப் படுகொலைசெய்யப்பட்டார்.
திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரி கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரான திமுகவைச் சேர்ந்த லட்சுமி (32), தன்கணவர் ராஜேந்திரன், குழந்தைகள் ராஜேஷ் (9) மற்றும் ராஜாத்தி (11) ஆகியோருடன் ஏலகிரி-தென்றல் நகரில்வசித்து வந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ராஜேந்திரன் வெளியே சென்றிருந்தபோது, யாரோ ஒருவன் அவர்களுடையவீட்டிற்குள் புகுந்து லட்சுமியைக் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான்.
பின்னர் லட்சுமியின் உடலை வெளியே இழுத்து வர அவன் முயற்சி செய்தான். அப்போது எதிர் பகுதியில் உள்ளவாட்ச்மேன் இதைப் பார்த்துவிட்டு கொலையாளியைப் பிடிக்க முயற்சித்தபோது, அவன் தப்பி விட்டான்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. தேர்தல் காரணமாக இந்தக் கொலைநடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ராஜேந்திரனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகவும் இதனால் கணவன்-மனைவிக்கு இடையேஅடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications