விருதுநகர், நெல்லையில் மின்னலுக்கு 2 பெண்கள் பலி
விருதுநகர்:
நேற்று (புதன்கிழமை) மாலை மின்னல் தாக்கி விருதுநகரில் ஒரு பெண்ணும், திருநெல்வேலியில் ஒரு பெண்ணும்உயிரிழந்தனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் சூறாவளி, இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழைபெய்து வருகிறது. நேற்று முன்தினம் தேனியில் ஆலங்கட்டி மழை பெய்து, அந்நகர மக்களை மகிழ்ச்சியிலும்ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
இந்நிலையில் நேற்று விருதுநகர் அருகே உள்ள மந்தனாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், வயலில்வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உடல் கருகி உயிரிழந்தார்.
அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரிலும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருபெண்ணும் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இவருடன் வேலை செய்த வேறு நான்கு பேர் மின்னலின் அதிர்ச்சியால்தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக மரங்கள்வேரோடு பெயர்ந்து விழுந்ததால், அப்பகுதிகளில் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications